என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் உள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்: கலெக்டர் பழனிசாமி பங்கேற்பு
    X

    நாகையில் உள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்: கலெக்டர் பழனிசாமி பங்கேற்பு

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் விடுபடாமல் வார்டு வாரியாக சரிபார்த்து வாக்காளர் பட்டியல் தயாரித்திடவும், கடந்த ஜனவரி 1–ந்தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கவும், வாக்காளர் அந்த வார்டை சேர்ந்தவரா என்பதை சரிபார்க்கவும், அலுவலர்கள் 100 சதவீதம் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை முனைப்புடன் செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஷ்ணுபரன், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×