என் மலர்
நாகப்பட்டினம்
இங்கு திருநிலை நாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இங்கு 43–ம் ஆண்டு ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருநிலை நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு 21 வகையான திரவங்களை கொண்டு அபிஷேகம் செய்து தங்க கவசம், தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை ஆகியவை நடந்தது.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர். தங்க அங்கி அலங்கார வழிபாடுகள் உபயதாரர் பச்சை மாதானம் சேது கோவிந்தவாமி ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதே போல் சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில், கோமளவல்லி அம்மன், இரட்டை காளியம்மன், பத்ரகாளியம்மன் கோவில்களிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகளின் தலைவர் பண்ணை. டி.சொக்கலிங்கம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அலகு குத்தி முளைப்பாரி எடுத்து சென்றனர். இவ்விழா கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. காலை கூறைநாடு கலியபெருமாள் இன்னிசையோடு பால்குடம் புறப்பட்டது. அதன்பின்பு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு மகாதானதெருவில் உள்ள திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மங்கள பொருட்கள் வழங்குதல் பின்னர் சமையல்கலைஞர் சங்க தலைவர் முருகன் வயலின் இன்னிசை, மாஸ்டர் கிரிதர் மிருதங்கம், கண்ணன் மயிலாடுதுறை எம்.ஏ.பங்கஜ். மங்களவாத்தியம் ஆகியவை நடைபெற்றது.
இவ்விழா ஏற்பாடுகளை சேந்தகுடி கமலநாதன் சேகர், கேரளா முரளி, முருகன், சிங்கராம்பிள்ளை. ஸ்ரீதர். வெங்கடேசன், முரளி. ராஜீ. மணி, திண்ணை ரவி, துர்க்கேஸ்வரன், நாகலிங்கம், வைத்தா, வி.ரவி, வி.பாலா, கே.ராஜேஷ்பாபு, சேகர்டைலர் ஆகியோர் செய்திருந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் குணசீலன் (வயது 27) பெயிண்டர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு அர்ச்சனா என்ற மகளும், ரூபன் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கவிதாவின் நடத்தையில் குணசீலனுக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வேதனை அடைந்த கவிதா கடந்த 19–ந் தேதி நீடாமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி கோபித்து சென்றதால் மனமுடைந்த குணசீலன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி நாகூர் சப்–இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லையை சேர்ந்தவர் ருக்மணி (வயது 70) இவர் வீட்டின் பின்புறம் சென்றபோது புதரில் மறைந்திருந்த பாம்பு கடித்தது. அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து நாகை சப்–இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சீர்காழி:
சீர்காழி ஈசானியத் தெருவில் உள்ள சட்டைநாதர் குளம் சுற்றுசுவர் இடிந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும் பராமரிப்புகள் இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சீர்காழி நகரில் மட்டும் கரிக்குளம், தாமரைக்குளம், ஆரியாப்பிள்ளைகுளம், தென்பாதிகுளம் மற்றும் கோவில்களில் உள்ள குளங்கள் என சுமார் 11க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களால்தான் சீர்காழி நகரில் நிலத்தடி நீர் அதிகரித்துவந்தது. ஆனால் காலப்போக்கில் குளங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு குளத்தின் பரப்பளவு குறைந்து காய்ந்த குட்டையாக மாறிவிட்டன.
இதேபோல் சீர்காழி ஈசானியத்தெருவில் சட்டைநாதர் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் ஈசானியத்தெரு, காமராஜர்அவென்யூ, வடபாதி மாரியம்மன் கோவில் தெரு, கோவிந்த ராஜன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நீர் ஆதாரமாக இருந்துவந்தது.
இந்த குளத்தில் சாலையோரம் பாதுகாப்பு கருதி நகராட்சி சார்பில் சுற்றுசுவர் கட்டப்பட்டு சில மாதங்களிலேயே 50அடி தூரத்திற்கு சுவர் குளத்தினுள்ளேயே இடிந்து விழுந்தது. அதனை இதுவரை நகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. மேலும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் குளம் மாசு அடைந்து வருகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு சட்டைநாதர் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த மணிக்கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது35). திருப்பூரில் வேலை பார்த்து வரும் இவர், மனு கொடுப்பதற்காக தன் மனைவி நாகலட்சுமியுடன் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்ததுக்கு வந்தார்.
நாகலட்சுமியை அலுவலகத்தின் கீழ்தளத்தில் விட்டுவிட்டு, கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு இளங்கோவன் சென்றுள்ளார். ஆனால், கலெக்டர் அலுவலகத்தின் மேல் தளத்தின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி, உச்சிக்கு சென்ற இளங்கோவன், அங்கு இருந்து தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். உடனே, நாகலெட்சமி அலறியடித்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நாகப்பட்டினம் தீயணைப்பு நிலையம், நாகூர் போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி, அவரைப்பிடித்தனர். லேசான மயக்கத்தில் இருந்த இளங்கோவனை கீழே கொண்டு வந்து, ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
“திருப்பூரில் மனைவியுடன் திருந்தி வாழும் என்னை, செம்பனார் கோவில், திருவெண்காடு, பொறையாறு ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளுக்காக அடிக்கடி வந்து விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்து வருகின்றனர்.
நான் தற்போது திருந்தி வாழ்கிறேன் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றேன்” என இளங்கோவன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் மயூரநாதர் கீழவீதியில் அபயஅனுக்கிரக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மயூரநாதர் கோவிலுக்கு வரும் பக்த்தர்கள் இக்கோவில்லை தரிசித்து செல்வது வழக்கம். கடந்த ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில் மர்மநபர்கள் நேற்றிரவு இக்கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஒரு உண்டியலை எடுத்து சென்று கோவிலின் பின்புறம் வைத்து உடைத்துள்ளனர். பின்னர் கோவில் கதவில் மாட்டப்பட்டிருந்த உண்டியல் மற்றும் பிரகாரத்திற்கு முன்பு இருந்த 2 திருவாட்சி, சரவிளக்குகள் 2, வெண்கல மணி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி வார்டு கவுன்சிலர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் சம்பவஇடத்துக்கு வந்த போலீசார் இக்கோவில் ஸ்தாபகரிடம் மேலும் பொருட்கள் திருட்டு போய் உள்ளதா என விசாரித்து வருகின்றனர் .
திருட்டு போன உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கலாம் என்றும், அதேபோல் திருட்டு போன திருவாட்சி, சரவிளக்கு, மணி ஆகியவற்றின் மதிப்பு சுமார் 40 ஆயிரத்துக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரம் கடை வீதி மற்றும் மாதானம் செல்லும் சாலையில் ஏராளமான கடைகள் உள்ளது. நேற்று நள்ளிரவு அங்கு வந்த கொள்ளை கும்பல் அடுத்தடுத்து 5 கடைகளின் முன் பக்க ஷட்டரை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டது.
செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 52 ஆயிரத்தை கொள்ளையடித்தது. அதன் அருகில் உள்ள வினோத் என்பவருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் இருந்த பணம், சேதுராமன் மளிகை கடையில் ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கப்பணம், சக்திவேல் வளையல் கடையில் ரூ. 7 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.அப்பகுதியில் பால முருகன் என்பவர் அடகு கடை வைத்துள்ளார். ஆனால் நகைகள் அங்கு இல்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அங்கிருந்த கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 300 ஐ எடுத்து சென்றனர்.
இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் 5 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கொள்ளிடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் அங்கு வந்தனர். கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.
பாலமுருகன் அடகு கடையில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் தீவிர ஆய்வு செய்தனர்.
5 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அருகே உள்ள தூத்தூர் குடியானவர் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஜெயராமன் (19). ஐ.டி.ஐ. படித்து விட்டு வீட்டில் இருந்தார்.அவர் மேல்படிப்பு படிக்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த ஜெயராமன் விஷம் குடித்து விட்டார்.மயங்கி விழுந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து பாகசாலை இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்கடையூர் பி.பி.என் மின் உற்பத்தி நிறுவனம் வருடந்தோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2016–ம் ஆண்டு 12–ம் வகுப்புதேர்வில் நாகை மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சீர்காழி பெஸ்ட் மெட்ரிக். பள்ளி மாணவி நித்யஸ்ரீக்கு ரூ.15,000–ம், 2–ம் இடம்பெற்ற ஏனங்குடி அல்காதிரியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹசானாவுக்கு ரூ.10,000–ம், 3–ம் இடம் பெற்ற மயிலாடுதுறை ஏ.ஆர்.சி காமாட்சி மெட்ரிக் பள்ளி மாணவி துளசிக்கு ரூ.6,000 பரிசுத் தொகைக்கான காசோலையும்.
10–ம் வகுப்புதேர்வில் நாகை மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவி ஆயிஷாசித்திகாவுக்கு ரூ.15,000–ம், 2–ம் இடம் பெற்ற மாணவி மனோரஞ்சனி (நஸ்ருல் முஸ்லிமின் மெட்ரிக் பள்ளி, நீடுர்), தினேஷ்ராஜ்(விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, சீர்காழி), மிருதுரோஷினி (ஜெய்ஹிந்த் மெட்ரிக் பள்ளி, தேரெழுந்தூர்) ஆகியோருக்கு தலா ரூ.10,000–ம், 3–ம் இடம் பெற்ற மாணவி லாவண்யா (காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை) சங்கவி (காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை), விக்ரம் (டி.பி.டி.ஆர் நேஷனல் மெட்ரிக் பள்ளி, மயிலாடுதுறை), வைஷ்ணவி (குருஞானசம்பந்தர் பள்ளி, மயிலாடுதுறை), பத்ரிநாத் (விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, சீர்காழி), ஐஸ்வர்யா (நடராஜன் தமயந்தி பள்ளி, நாகை) ஆகியோருக்கு தலா ரூ.6,000 பரிசுத் தொகைகாசோலை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், மாநில அளவில் சிறப்பிடம் பெற்று தம் பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு நடுத்திட்டு தெற்கு தெருவை சேர்ந்த 14 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (34) தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மணல் மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






