என் மலர்
செய்திகள்

நாகூர் அருகே பெயிண்டர் தற்கொலை
நாகூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் குணசீலன் (வயது 27) பெயிண்டர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு அர்ச்சனா என்ற மகளும், ரூபன் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கவிதாவின் நடத்தையில் குணசீலனுக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வேதனை அடைந்த கவிதா கடந்த 19–ந் தேதி நீடாமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி கோபித்து சென்றதால் மனமுடைந்த குணசீலன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி நாகூர் சப்–இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






