என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே வாலிபர் தற்கொலை
    X

    நாகை அருகே வாலிபர் தற்கொலை

    நாகை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அருகே உள்ள தூத்தூர் குடியானவர் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஜெயராமன் (19). ஐ.டி.ஐ. படித்து விட்டு வீட்டில் இருந்தார்.அவர் மேல்படிப்பு படிக்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த ஜெயராமன் வி‌ஷம் குடித்து விட்டார்.மயங்கி விழுந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து பாகசாலை இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×