என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே 5 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை
    X

    சீர்காழி அருகே 5 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை

    சீர்காழி அருகே அடுத்தடுத்து 5 கடைகளில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரம் கடை வீதி மற்றும் மாதானம் செல்லும் சாலையில் ஏராளமான கடைகள் உள்ளது. நேற்று நள்ளிரவு அங்கு வந்த கொள்ளை கும்பல் அடுத்தடுத்து 5 கடைகளின் முன் பக்க ‌ஷட்டரை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டது.

    செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 52 ஆயிரத்தை கொள்ளையடித்தது. அதன் அருகில் உள்ள வினோத் என்பவருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் இருந்த பணம், சேதுராமன் மளிகை கடையில் ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கப்பணம், சக்திவேல் வளையல் கடையில் ரூ. 7 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.அப்பகுதியில் பால முருகன் என்பவர் அடகு கடை வைத்துள்ளார். ஆனால் நகைகள் அங்கு இல்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அங்கிருந்த கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 300 ஐ எடுத்து சென்றனர்.

    இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் 5 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கொள்ளிடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் அங்கு வந்தனர். கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

    பாலமுருகன் அடகு கடையில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் தீவிர ஆய்வு செய்தனர்.

    5 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×