என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் பணம், சரவிளக்குகள் திருட்டு
    X

    மயிலாடுதுறையில் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் பணம், சரவிளக்குகள் திருட்டு

    மயிலாடுதுறையில் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் பணம் மற்றும் சரவிளக்குகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் மயூரநாதர் கீழவீதியில் அபயஅனுக்கிரக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மயூரநாதர் கோவிலுக்கு வரும் பக்த்தர்கள் இக்கோவில்லை தரிசித்து செல்வது வழக்கம். கடந்த ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்நிலையில் மர்மநபர்கள் நேற்றிரவு இக்கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஒரு உண்டியலை எடுத்து சென்று கோவிலின் பின்புறம் வைத்து உடைத்துள்ளனர். பின்னர் கோவில் கதவில் மாட்டப்பட்டிருந்த உண்டியல் மற்றும் பிரகாரத்திற்கு முன்பு இருந்த 2 திருவாட்சி, சரவிளக்குகள் 2, வெண்கல மணி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து இப்பகுதி வார்டு கவுன்சிலர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் சம்பவஇடத்துக்கு வந்த போலீசார் இக்கோவில் ஸ்தாபகரிடம் மேலும் பொருட்கள் திருட்டு போய் உள்ளதா என விசாரித்து வருகின்றனர் .

    திருட்டு போன உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கலாம் என்றும், அதேபோல் திருட்டு போன திருவாட்சி, சரவிளக்கு, மணி ஆகியவற்றின் மதிப்பு சுமார் 40 ஆயிரத்துக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

    Next Story
    ×