என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 2-வது நாளாக இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவரை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 142 தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க கோரியும் நாகை தலைமை தபால் நிலையம் முன் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் இலங்கை கடற்படையை கண்டித்து நேற்று முன்தினம் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டம் இரவு பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, நம்பியார் நகர், ஆரிய நாட்டு தெரு, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், வேளாங்கண்ணி, செருதூர், வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
மீனவர்கள் போராட்டத்தால் பல கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணக்குடி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அமல் ஆண்ட்ரோஸ்(34) இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை டவுனுக்கு வந்துவிட்டு தருமபுரம் சாலை எல்.பி.நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கியதில் தடுமாறி கீழேவிழுந்துள்ளார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மயிலாடுதுறை அரசுஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 142 தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க கோரியும் நாகை தலைமை தபால் நிலையம் முன் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு அவர்கள் இலங்கை கடற்படையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (செவ்வாய்கிழமை) 2-வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.இதில் பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, நம்பியார் நகர், ஆரிய நாட்டு தெரு, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், வேளாங்கண்ணி, செருதூர், வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது. பல கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் சுதா (32). இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்(28), அனீஸ்(41), கருப்பம்புலம் அரசு மருத்துவமனை டாக்டர் ஆனந்த்(48) ஆகிய மூவரும் சென்று அங்கு பணியில் இருந்த சுதாவை குடிபோதையில் தரக்குறைவாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டினார்களாம்.
இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பாலு, சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அரவிந்த், அனீஸ், டாக்டர் ஆனந்தன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தங்கச்சி மடத்தில் உள்ள மீனவர்கள் உள்பட ஏராளமானோர் அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 7-வது நாளாக நாகை மீனவர்கள் கட லுக்கு செல்லவில்லை. இதனால் பைபர் மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தங்கச்சி மடம் மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஒப்படைக்க வேண்டும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் 5 மாவட்ட மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாகை மாவட்ட மீனவர் சங்கங்கள் சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
இதே போல் தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவா சத்திரம் பகுதி மீனவர்களும் இன்று காலை தொடர் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நாகை மீனவர்கள் இன்று 6-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் 1800 விசைப்படகுகளும், 8 ஆயிரம் பைபர் படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினம் மீனவர் சங்க பிரதிநிதிகள் நேற்று முன்தினம் தங்கச்சி மடத்துக்கு சென்று அங்கு போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
அடுத்த கட்டமாக இலங்கை கடற்படையை கண்டித்தும், தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்கள்.
நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் அருகில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள செண்பகராய நல்லூரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகள் ரம்யா (24). எம்.எஸ்.சி. எம்.பில். பட்டதாரி.
இவர் கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை பன்னீர் செல்வம் கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
அதில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமோகன் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி விசாரணை நடத்தி வருகிறார்.
நாகப்பட்டினம்:
கடந்த 6-ந்தேதி இந்திய- இலங்கை இடையிலான ஆதம்பிரிட்ஜ் என்ற இடத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர் பிரிட்ஜோ (வயது 21) என்பவர் உயிரிழந்தார்.
மேலும், 3 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் குறித்து நாகை அக்கரைப்பேட்டை சமுதாய கூடத்தில் நாகை தாலுகா மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாகை பகுதியில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர் இறந்ததால் இலங்கை கடற்படையினருக்கு கண்டனம் தெரிவித்தும், தொடர்ந்து தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர்களை பாதுகாக்க தவறுகின்ற மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் நாகை தாலுகா மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாகை தாலுகா மீனவர்கள் இன்று 5-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் நாகை தாலுகாவில் சுமார் ஆயிரத்து 600 விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்து 100 பைபர் படகுகளை வைத்துள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாகையில் மீன் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 5 கோடி முதல் 8 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6 மாவட்ட மீனவர்களும் 13-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்துள்ளதால் மீன் விலை அதிகரிப்பதோடு ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.
சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (60). விவசாய தொழிலாளி. இவர் இன்று காலை வெளியில் சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சீர்காழி வாரச்சந்தை அருகே வரும் போது அந்த வழியாக தறிகெட்டு வந்த லாரி மோதியது. மேலும் சிலர் மீது மோதுவது போல் வந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயராமன் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் சிதம்பரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்து சீர்காழி போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சீர்காழி அரசு ஆஸ்பத்திரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கை விட்டனர். இந்த மறியல் காரணமாக சிதம்பரம் -மயிலாடுதுறை சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 3-ந்தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து சென்றனர். அதேபோல் கடந்த 6-ந்தேதி இந்தியா-இலங்கை இடையிலான ஆதம்பிரிட்ஜ் என்ற இடத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ (21) என்பவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.

இதை தொடர்ந்து நாகை அக்கரைப்பேட்டை சமுதாய கூடத்தில் கடந்த 7-ந்தேதி நாகை தாலுகா மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து 9-ந்தேதி (நேற்று) முடிவு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி நேற்று நாகை மீன்பிடி துறைமுக அலுவலக கட்டிடத்தில் அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னதாக இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை கடற்படையினை கண்டித்து ராமேசுவரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மற்ற மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் கலந்து கொள்வது. இலங்கை அரசை கண்டித்து 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அந்தந்த மாவட்டத்தில் மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது. இன்று (அதாவது நேற்று) முதல் 6 மாவட்ட மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. இந்த போராட்டம் சம்பந்தமாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் 6 மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடி எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இந்திய கடலோர காவல்படையின் பிராந்திய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் காவல் படை வீரர்கள் தென்னிந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஐ.சி.ஜி.எஸ்.- அமயா, ஐ.சி.ஜி.எஸ்.-ராணி துர்க்காவதி, சி-415, சி-422 உள்ளிட்ட நவீன ரோந்து கப்பல்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம் மாலை 6 மணி அளவில் ‘அருனவேஷ்’ என்ற ரோந்து கப்பல் மூலம் இந்திய கடலோர காவல் படையினர் நாகப்பட்டிணம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாகப்பட்டிணத்தில் இருந்து கிழக்கே 50 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் இலங்கை மீனவர்கள் 10 பேர், எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பது தெரியவந்தது. இதையடுத்து இலங்கை மீனவர்களை, இந்திய கடலோர காவல் படையினர் சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் காரைக்கால் கடலோர காவல் படையினர் சி-415 ரோந்து கப்பலில் விரைந்து சென்று ‘அருனவேஷ்’ கப்பலில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேரையும் கைது செய்து நேற்று மதியம் காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, கமாண்டர் பட்நாயக்கிடம் ஒப்படைத்தனர்.
இலங்கை மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைதொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின்னர் இலங்கை மீனவர்கள் 10 பேரும் நாகப்பட்டிணம் தமிழக கடலோர பாதுகாப்புக்குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து கமாண்டர் பட்நாயக் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை திரிகோண மலையை சேர்ந்த மதுஷன் (வயது27) என்பவருக்கு சொந்தமான ‘மனோஜ்’ என்ற விசைப்படகில் அவருடன் கவின்ந்ரா(29), அசென்(20), கோசலன்(20), தனன்பலன் (57) ஆகிய 5 பேர் கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதியும், லட்சுமண்(29) என்பவருக்கு சொந்தமான ‘கலனபுதா’ என்ற விசைப்படகில் அவருடன் நலின்டா(25), சுரேஷ்(29), சமன்(39), சமரா (29) ஆகியோர் கடந்த 3-ந் தேதியும் திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்கள் நேற்றுமுன்தினம் மாலை 6 மணி அளவில் நாகப்பட்டிணத்திற்கு கிழக்கே 50 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையினர், இலங்கை மீனவர்களை மடக்கிப் பிடித்து காரைக்கால் கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். இவர்கள் காரைக்கால் கொண்டு வரப்பட்டு விசாரணைக்கு பின்னர் நாகப்பட்டிணம் கடலோர பாதுகாப்புக்குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய 2 படகுகள் மற்றும் அதில் இருந்த 400 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய எல்லைக்குள் வெளிநாட்டினர் ஊடுருவுவதை தடுக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களில் சமன் என்பவர் மாற்றுத்திறனாளி ஆவார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் திரிகோணமலையில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டோம். எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் காற்று மற்றும் அலைகளின் ஓட்டத்தில் எதிர்பாராமல் இந்திய எல்லைக்குள் நுழைய நேரிட்டது. அச்சமயத்தில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் எங்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்தனர் என்று கூறினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் மீது இலங்கை கடல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கழுத்தில் குண்டு பாய்ந்து பிரிட்ஜோ என்ற மீனவர் பரிதாபமாக இறந்தார். இலங்கை கடல் படையினரால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்திய கடலோர காவல் படை அதிரடி நடவடிக்கை எடுத்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடித்த இலங்கை மீனவர்களை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப்பேட்டை நைனியப்பா நாட்டார் சமுதாய கூடத்தில்நாகை தாலுகா மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நாகூர் மேலத் தெரு, ஆரிய நாட்டுத் தெரு, சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர், நாகை ஆரிய நாட்டுத் தெரு, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த கிராம பஞ்சாயத்தார், நாட்டார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பலியானதை கண்டித்தும், தொடர்ந்து மீனவர்களை அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும் நாகை தாலுகா மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்து ஆலோசனை செய்து முடிவு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம்படி நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதே போல் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் மல்லிப்பட்டினம் மீனவ சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் பாதுகாப்பு நல சங்க மாநில செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திலும் ராமேசுவரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தங்கச்சி மடம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நாகை புதிய கடற்கரையில் மாணவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கடலில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
அதன் பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






