என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செவிலியரிடம் தகராறு: டாக்டர் உட்பட 3 பேர் கைது
    X

    வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செவிலியரிடம் தகராறு: டாக்டர் உட்பட 3 பேர் கைது

    வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் செவிலியரிடம் தகராறு செய்த டாக்டர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் சுதா (32). இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்(28), அனீஸ்(41), கருப்பம்புலம் அரசு மருத்துவமனை டாக்டர் ஆனந்த்(48) ஆகிய மூவரும் சென்று அங்கு பணியில் இருந்த சுதாவை குடிபோதையில் தரக்குறைவாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டினார்களாம்.

    இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பாலு, சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அரவிந்த், அனீஸ், டாக்டர் ஆனந்தன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×