என் மலர்
செய்திகள்

விபத்தில் தொழிலாளி காயம்: பொதுமக்கள் சாலை மறியல்
சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி காயம் அடைந்தார். லாரி டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (60). விவசாய தொழிலாளி. இவர் இன்று காலை வெளியில் சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சீர்காழி வாரச்சந்தை அருகே வரும் போது அந்த வழியாக தறிகெட்டு வந்த லாரி மோதியது. மேலும் சிலர் மீது மோதுவது போல் வந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயராமன் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் சிதம்பரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்து சீர்காழி போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சீர்காழி அரசு ஆஸ்பத்திரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கை விட்டனர். இந்த மறியல் காரணமாக சிதம்பரம் -மயிலாடுதுறை சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story