என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே பட்டதாரி பெண் மாயம்
வேதாரண்யம் அருகே பட்டதாரி பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள செண்பகராய நல்லூரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகள் ரம்யா (24). எம்.எஸ்.சி. எம்.பில். பட்டதாரி.
இவர் கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை பன்னீர் செல்வம் கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
அதில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமோகன் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






