search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டும் குழியுமான சாலையால் வாகன‌ ஓட்டிகள் அவதி
    X

    குண்டும் குழியுமாக காணப்படும் தோகூர்- திருச்சி சாலை.

    குண்டும் குழியுமான சாலையால் வாகன‌ ஓட்டிகள் அவதி

    • இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
    • இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகவும் நேரிடுகிறது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலம் கல்லணை.

    கல்லணையில் காவிரி, கொள்ளிடம், மற்றும் கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளின் பாலங்கள் அமைந்துள்ளன.

    பாலங்களில் உள்ள மதகுகளின் வழியாக காவிரி டெல்டா மாவட்டத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கப்படும்.

    சுற்றுலாத்தலமா கவிளங்கு வதால் திருச்சி மாவட்டத்திலிருந்து, தமிழகத்தின் பிற பகுதியில் இருந்தும் விடுமுறை நாட்களில் மட்டும் இல்லாமல் தினம் தோறும் ஏராளமான மக்கள் வந்து பார்த்து செல்வார்கள்.

    திருச்சியில் இருந்து கல்லணைக்கு திருவளர்ச்சோலை வழியாகவும் சர்க்கார் பாளையம் வழியாகவும் இரண்டு சாலைகள் உள்ளன.

    சர்க்கார் பாளையம் வழியாக வரும் சாலை திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையான தூரமும் தஞ்சை மாவட்ட எல்லையில் குறைந்த அளவிலான தூரமும் சாலை உள்ளது.

    தோகூர் பஸ் நிலையத்தில் இருந்து வேங்கூர் வரையுள்ள சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

    வேங்கூருக்கும் தோகூருக்கும் இடையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் சிதிலம் அடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த வழியாக கல்லணையை சுற்றிப் பார்க்க கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும்

    இந்த மூன்று கிலோமீட்டர் தொலைவு உள்ள சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவு உள்ள சாலை மட்டும் மிகுந்த சேதமடைந்து காணப்படுகிறது.

    இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகவும் நேரிடுகிறது.

    சீரமைக்கப்படாத நிலையில் உள்ள ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலையை உடனடியாக சீரமைத்து கல்லணைக்கு வரும் பயணிகள் பாது காப்பான‌ பயணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

    Next Story
    ×