search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் சர்வீஸ் ரோட்டில் பறக்கும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதி - கலெக்டரிடம் புகார்
    X

    பாவூர்சத்திரத்தில் சர்வீஸ் ரோட்டில் பறக்கும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதி - கலெக்டரிடம் புகார்

    • சர்வீஸ் ரோடானது தார் சாலையாக அமைக்கப்படாத காரணத்தினால் வாகனங்கள் செல்லும்போது மண்புழுதி அதிக அளவில் பறக்கிறது.
    • பாவூர்சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கும் இடத்தை வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்து சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரபாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணிகள் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்தது. அதனால் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தேன். அதன்படி உயர்நீதிமன்றம் 18 மாதங்களில் சாலை பணிகளை முடிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்திருந்தது. சாலை பணிகள் தற்பொழுது 80 சதவீதம் முடிக்கப்பட்டாலும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளும், ரெயில்வே மேம்பால பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது.

    பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணி நடைபெறும் இடத்திலும், அங்குள்ள பஸ் நிலையம் அருகிலும் சாலை அமைக்க வேண்டிய இடத்தில் நில ஆர்ஜிதம் செய்து எடுக்கப்பட்ட நிலத்தில் உள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்படாத காரணத்தினால் இப்பகுதிகளில் வேலை மந்தமாக நடைபெறுகிறது. மேலும் சர்வீஸ் ரோடானது தார் சாலையாக அமைக்கப்படாத காரணத்தினால் வாகனங்கள் செல்லும்போது மண்புழுதி அதிக அளவில் பறக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்களும் கடும் சிரமம் அடைகின்றனர்.

    எனவே பாவூர்சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கும் இடத்தை வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை விரைவாக அளவீடு செய்து ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×