search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில்  தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    X

    சாலைகளில் பேரிகாடுகள் வைக்கப்பட்டுள்ள காட்சி

    தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    • தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை முதல் முள்ளக்காடு வரை சாலையின் இரு புறமும் ஊராட்சி காலத்தில் வடிகால்கள் இருந்தது.
    • குறிப்பாக ஸ்பிக்-பாரதி நகர் சந்திப்பில் தொடர் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை முதல் முள்ளக்காடு வரை சாலையின் இரு புறமும் ஊராட்சி காலத்தில் வடிகால்கள் இருந்தது. மாநகராட்சியான பின் சாலை விரி வாக்கத்தின் போது அகற்றப்பட்டது, மீண்டும் வடிகால் அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இதனால் சிறு மழை பெய்தாலும் தண்ணீர் முழுவதும் சாலையில் தேங்கி நிற்கிறது. இது போல் துறைமுகம் மற்றும் உப்பளங்களில் இருந்து லோடு ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து சிந்தும் நிலக்கரி, பருப்பு,உப்பு,மணல், சாம்பல் உள்ளிட்ட கிடங்குகளுக்கு செல்லக்கூடிய பொருட்கள் என அனைத்தும் சாலையில் சிந்தி கொட்டி கிடக்கிறது.

    இதனால் வாகனங்கள் செல்லும் போது புகை மண்டலம் ஏற்பட்டு மக்கள் கண் பார்வை பாதிப்பு, சுவாச பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் சாலையின் கீழே குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செல்லும் குடிநீர் குழாய்கள் தொடர்ந்து உடைந்து வருவதின் காரணமாக கிடங்குகள் ஏற்பட்டு வாகனத்தில் வருபவர்கள் அதில் விழுந்து விபத்துகள் நிகழ்ந்து வருகிறது.

    குறிப்பாக ஸ்பிக்-பாரதி நகர் சந்திப்பில் தொடர் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகிறது.

    இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் 43 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்த அப்பகுதி பொதுமக்கள் கவலை அடைந்தனர்.

    இந்நிலையில் சாலை முழுவதும் பேரிகாடுகளால் நிரம்பி இருக்கிறது, முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு ஒரே இடத்தில் 6 பேரிக்காடுகள் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப் பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×