search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்காநல்லூர் உழவர் சந்தையில் நடுரோட்டில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்
    X

    சிங்காநல்லூர் உழவர் சந்தையில் நடுரோட்டில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்

    • போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுத்தல் எடுக்கப்பட்டுள்ளது.
    • சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    குனியமுத்தூர்,

    கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை வியாபாரம் நடைபெறும். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த பொருட்களை வாங்க சிங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள்.இதனால் எப்போது இந்த சந்தை மற்றும் சந்தை பகுதியில் அதிகளவு கூட்டம் காணப்படும். வாகனங்களும் அதிகளவில் நிற்கும்.

    காலை 8 மணி முதல் 9.30 வரை பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்கள் அதிகமாக செல்வதை காண முடியும். இந்த சந்தை திருச்சி சாலையில் செயல்படுவதால், அந்த வழியாக எப்போதும் பஸ்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கும்.

    இந்த நிலையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உழவர் சந்தை முன்பாக நிறுத்தி விட்டு உள்ளே சென்று விடுகின்றனர். இதனால் திருச்சி சாலை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. ஒரு சில வியாபாரிகளும் சந்தை முன்பாக வெளியே கடை போட்டு வியாபாரம் செய்கின்றனர். இதனால் அங்கு கூட்டம் கூடுவதாலும் போக்குவர த்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகி ன்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு 2 வாசல் உள்ளது. திருச்சி சாலை மெயின் ரோட்டில் ஒரு வாசலும், வலது புறம் ஹவுசிங் யூனிட் செல்லும் வழியில் ஒரு வாசல் உள்ளது. ஹவுசிங் யூனிட் செல்லும் பாதை மிகவும் அகலமான பாதையாகும். அந்த விசாலமான பாதை எப்போதுமே சுதந்தரமாக இருக்கும்.

    அந்தப் பாதையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் திருச்சி ரோடு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும். இதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவசரத்தில் வந்து வாகனத்தை நிறுத்தி அவசரமாக காய்கறிகளை வாங்கி செல்வது அவர்களது வழக்கம்.

    தினமும் காலை வேளையில் அந்த பகுதியில் ஒரு போக்குவரத்து போலீசா ரை நிறுத்தி வாகனங்களை ஹவுசிங் யூனிட் செல்லும் சாலையில் நிறுத்தினால் இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக காட்சியளிக்கும். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? காலை சமயங்களில் இந்த திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கண்டி ப்பாக போக்குவ ரத்து போலீசார் முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×