search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோகனூர் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் தேரோட்டம் ரத்து
    X

    மோகனூர் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் தேரோட்டம் ரத்து

    • தைப்பூசத்தையொட்டி, தேரோட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கம் போல், தைப்பூச நாளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    • வருகிற பிப்ரவரி 9-ந் தேதி வரை தினசரி கட்டளைதாரர்கள் மூலம் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தைப்பூசத்தை முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மற்றும் தேரோட்டம் நடைபெறும்.

    இந்த ஆண்டு, வரும் பிப்ரவரி 5-ந் தேதி, தைப்பூச விழா தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டப்படுகிறது. மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில், ரூ.40 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில் திருப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு, முன் கோபுரம் வர்ணம் பூசுதல், தேருக்கான பழைய மரக் கட்டைகள் அகற்றி, புதிய மரக்கட்டைகள் பொருத்தப்படுகிறது. கோவில் பகுதியில் மேல்தளம் அமைத்தல், பழைய ஆஸ்பெஸ்டாஸ் சீட் அகற்றி, பூ வேலைப்பாடுகள் அமைத்தல், கதவு, ஜன்னல் அமைத்தல், பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு, தைப்பூசத்தையொட்டி, தேரோட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கம் போல், தைப்பூச நாளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி, தைப்பூசக் கொடியேற்றம் கோவிலில் நடைபெற்றது. வருகிற பிப்ரவரி 9-ந் தேதி வரை தினசரி கட்டளைதாரர்கள் மூலம் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வருகிற பிப்ரவரி 5-ந் தேதி, தைப் பூசத்தன்று, பால் குடம், தீர்த்தக்குடம், அபிசேகம் மற்றும் காவடி ஊர்வலம் நடைபெறும். விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×