என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க.வை கற்பனையில் கூட யாராலும் அழிக்க முடியாது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- ஷெனாய் நகரில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடைபெற்றது.
- அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் என்றார்.
சென்னை:
சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன்.
விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலன் தான் அதிகம் இருக்கும். எனவே அதை விரும்புகிறேன்.
தி.மு.க.வை கற்பனையில் கூட அழிக்க முடியாது.
கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது அ.தி.மு.க.
பாஜகவும், அதிமுகவும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.
மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என்பதால் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
போலியான பெருமைகள் தேவையில்லை, உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும்.
துர்கா ஸ்டாலின் கோவிலுக்குச் செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம்.
ஆரியத்திற்கு தான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல.
நமது கருத்துக்க்ள் தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு ரத்து இயக்கத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.






