என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாவூர்சத்திரம் அருகே மின்னொளி கைப்பந்து போட்டிகள்
  X

  வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

  பாவூர்சத்திரம் அருகே மின்னொளி கைப்பந்து போட்டிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை அணியினர் முதல் பரிசை பெற்றனர்.
  • பெண்கள் பிரிவில் முதல் பரிசு சென்னை எஸ்.டி.ஏ.டி. அணி பெற்றது.

  தென்காசி:

  தென்காசி மாவட்ட கைப்பந்துகழக செயலாளர் கதிர்வேல் முருகன் தலைமையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் எஸ்.கே.பி. திடலில் 2 நாள் மின்னொளி கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை அணியினர் முதல் பரிசையும், ராஜபாளையம் அணியினர் 2-ம் பரிசையும், மடத்தூர் எஸ்.கே.பி. குத்தாலிங்கம் நினைவு கைப்பந்து அணியினர் 3-ம் பரிசையும், சுரண்டை அணியினர் 4-ம் பரிசும் பெற்றனர்.

  முதல் பரிசு ரூ. 25 ஆயிரம் சிவநாடானூர் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி வழங்கினார். 2-ம் பரிசு ரூ. 20 ஆயிரம் வினோத்குமார் வழங்கினார். 3-ம் பரிசு ரூ. 15 ஆயிரம் மடத்தூர் ஏபல் எட்வர்ட் தர்மராஜ் லில்லி புஷ்பம் நினைவாக அவர்களது குடும்பத்தினர் வழங்கினர். 4-ம் பரிசு ரூ. 10 ஆயிரம் புல்லுக்காட்டுவலசை தர்மர், பாலு, மாரிமுத்து சிட்பண்ட்ஸ் அதிபர்கள் வழங்கினர்.

  பெண்கள் பிரிவில் முதல் பரிசு சென்னை எஸ்.டி.ஏ.டி. அணியினரும், 2-ம் பரிசு தமிழ்நாடு தபால்துறை அணியினரும், 3-ம் பரிசு ஈரோடு பி.கே.ஆர். அணியினரும், 4-ம் பரிசு மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியினரும் பெற்றனர். விளையாட்டு ஏற்பாட்டினை வாஞ்சிநாதன், ஆனந்த், வேல்ராஜ், பிரவின், ஆல்வின் ஆகியோர் செய்திருந்தனர்.

  Next Story
  ×