search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை நெல்லை வருகை- அரசு மருத்துவமனையில் முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கிறார்
    X

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை நெல்லை வருகை- அரசு மருத்துவமனையில் முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கிறார்

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார்.
    • தொடர்ந்து மருத்துவ படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகிறார்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார்.

    கட்டிடங்களை திறந்து வைக்கிறார்

    விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி வரும் அவர் கயத்தாறு அருகே உள்ள கடம்போடு வாழ்வு, காயாமொழி, சாத்தான்குளம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கனவே முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.

    ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் எக்ஸ்ரே அறை ஆகிய கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    சான்றிதழ்

    தொடர்ந்து மருத்துவ படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.

    Next Story
    ×