என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரரிடம் செல்போன் - பணம் பறிப்பு
- கீழே விழுந்ததில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- 34 வயது வாலிபர் டி.எஸ்.பி. 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
கோவை,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 34 வயது வாலிபர்.
இவர் டி.எஸ்.பி. 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு 9.45 மணிக்கு போலீஸ்காரர் கோத்தகிரியில் இருந்து ேமட்டுப்பாளையத்திற்கு வந்தார். பின்னர் தான் புக் ெசய்திருந்த பஸ் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்றார்.
அப்போது அவர் புக் செய்த பஸ் 9.30 மணிக்கு சென்று விட்டது. பஸ் இல்லாததால் இதுகுறித்து போலீஸ்காரர் அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.
அதற்கு நீங்கள் புக் செய்த பஸ் 9.30 மணிக்கு புறப்படும். ஆனால் நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள் என தெரிவித்தனர்.
அப்போது போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஊழியர்கள் கூறியதை கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அங்கிருந்த வர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழியாக ரோந்து சென்ற மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து போலீஸ்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பஸ் கோவை சென்றிருக்கும். நீங்கள் கோவை சென்று ஏறி செல்லுங்கள். இல்லையென்றால் விடுதியில் தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் என கூறி விட்டு சென்றனர்.
ஆனால் போலீஸ்காரர் கோவைக்கும் செல்லாமல் விடுதிக்கும் செல்லாமல், மேட்டுப்பாளையம் பகுதியில் குடிபோதையில் சாலையில் சுற்றி திரிந்துள்ளார்.
இரவு முழுவதும் அங்கேயே சுற்றி திரிந்ததாக தெரிகிறது. நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் ேபாலீஸ்காரர் அருகில் வந்து அவர் போதையில் இருப்பதை பயன்படுத்தி, போலீஸ்காரர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து விட்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் கீழே விழுந்ததில் போலீஸ்காரருக்கு கை, கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வழியாக வந்த போலீசார், அவரை மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ்காரர் போதை யில் இருந்ததால் எவ்வளவு பணத்தை பறிகொடுத்தார் என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






