search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பு பணி முடியாததால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் மேலும் 2 நாட்கள் ரத்து
    X

    பராமரிப்பு பணி முடியாததால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் மேலும் 2 நாட்கள் ரத்து

    • 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து கிடக்கின்றன
    • இடிபாடுகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மும்முரம்

    மேட்டுப்பாளையம்,

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டியுள்ள நீலகிரி, கோவை மாவட் டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதனிடையே குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு பெய்த கனமழைக்கு ஆடர்லி, ஹில்கு ரோவ் இடையே 5க்கு மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறை கள், மரங்கள் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் கடந்த 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மலை ெரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ெரயில்வே பணி மனை ஊழியர்கள் தண்ட வாளங்களில் பராமரிப்பு பணியை முடித்ததால் 8-ந் தேதி மலை ெரயில் இயக்கப்பட்டது.ஆனால் அன்றைய தினம் இரவு பெய்த கன மழையால் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்வாளத்தில் மரம், பாறைகள் சரிந்து விழுந்தன.

    இதனால் கடந்த 9-ந் தேதி முதல் 16-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ெரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்ேவ நிர்வாகம் அறிவித்தது.

    இந்நிலையில் மேட்டுப் பாளையம்-குன்னூர் மலை ெரயில் பாதையில் மேலும் சில இடங்களில் தண்டவாளத்தில் விழுந்த மரம், பாறைகளை அகற்றப்படாததால் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மலை ெரயில் மீண்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனால் மலை ெரயிலில் பயணம் செய்ய காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×