search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
    X

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

    • வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி
    • உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பங்கேற்பு

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி கேரளா மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டம் உள்ளது.

    ஆண்டு தோறும் இப்பகுதி களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இதேபான்ற நேரங்களில் பில்லூர் அணைக்கு அந்த பகுதிகளில் பொழியும் மழைநீர் வந்தடையும். அப்போது மின் உற்பத்தி போக மீதமுள்ள நீர் பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்போது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை யோரத்தில் உள்ள மக்கள், வருவாய் துறையினர் சார்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையையொட்டி மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சார்பில் வெள்ள பாதிப்பு நேரங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வனபத்ர காளியம்மன் கோவில் அருகே நடத்தப்பட்டது.

    மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் 10-க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ள பாதிப்பு காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகு மூலம் எப்படி மீட்பது. அவர்களுக்கு எப்படி பாது காப்பு கவசம் வழங்குவது, பரிசல் மூலம் சென்று எப்படி காப்பாற்றுவது? என்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் உள்ளூர் பொது மக்கள் மட்டுல்லாமல், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பங்கேற்றனர்.

    Next Story
    ×