search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரை பேரூராட்சியில் மெகா தூய்மை பணி
    X

    பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தூய்மை பணியினை தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

    தென்திருப்பேரை பேரூராட்சியில் மெகா தூய்மை பணி

    • தென்திருப்பேரைக்கு திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
    • தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மெகா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    ஆன்மீக சிறப்பு வாய்ந்த தென்திருப் ேபரையில் நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைக்காதர் கோவி லும், நவகைலாயங்களில் ஒன்றான சிவன் கோவிலும் உள்ளது. தென்திருப் பேரைக்கு திருவிழா காலங்களில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோரது உத்தரவின் பேரில், தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி குப்பை இல்லா நகரத்தை உருவாக்குவதற்காக, 'என் குப்பை என் பொறுப்பு' என்ற அடிப்படை யில் வீடு தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தென்திருப்பேரை யில் நேற்று ஒட்டுமொத்த மெகா தூய்மை பணி நடைபெற்றது. தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மெகா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம் ஆகிய 3 பேரூராட்சி அலுவல கங்களில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தென் திருப்பேரை தூய்மை பணி யாளர்களுடன் இணைந்து மெகா தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், கொடி, மாரியம்மாள், இளநிலை அலுவலர் சேக் அகமது மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மெகா தூய்மை பணியில் பொதுமக்களிடம் குப்பை இல்லா நகரை உருவாக்கி சுகாதாரத்தை பேணிக் காப்போம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    Next Story
    ×