என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிநகர் -கந்தசாமிபுரம் இணைப்பு  புதிய சாலை பணிகள்
    X

    புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியபோது எடுத்தபடம்.

    மணிநகர் -கந்தசாமிபுரம் இணைப்பு புதிய சாலை பணிகள்

    • வெள்ளரிக்காயூரணி‌ தனி பைப் லைன் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
    • சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நாசரேத்:

    நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தானியாநகர்- மணிநகர்- கந்தசாமிபுரம் இணைப்பு புதிய சாலை அமைக்கும் பணி மற்றும் வெள்ளரிக்காயூரணி தனி பைப் லைன் பணி தொடக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை தாங்கி இணைப்பு புதிய சாலை மற்றும் பைப் லைன் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ், துணை தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வ குமார், கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, பத்ரகாளி, ஜஜினஸ்குமார், ஜெயா, ரவீந்திரன், இளநிலை பொறியாளர் விஜயகுமார், தொழில் நுட்ப உதவியாளர் பிரகாஷ், பைப் லைன் பிட்டர் எட்வின், மேற்பார்வையாளர் ராஜேந்திரன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×