என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் விவகாரம் - முதல்வர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு
- தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பா.ஜ.க. அல்லாத மாநில முதல் மந்திரிகளுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதினார்.
- மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரினார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது, ஜனநாயகத்துக்கு எதிரான ஆளுநர்களின் செயல்பாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர் கூட்டத்தைக் கூட்டுமாறும் மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்தார்.
Next Story