என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் ஆண் பிணம்
- காரைக்கால், துறைமுகத்தின் ஒரு பகுதியில், மர்மமான முறையில் இறந்த ஆண்பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
- பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் காவலராக பணிபுரிபவர் ஜோதிமணி. இவர், நேற்று முன்தினம் காலை பணியில் இருந்த போது, துறைமுகத்தின் ஒரு பகுதியில், மர்மமான முறையில் இறந்த ஆண்பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, ஜோதிமணி காரைக்கால் மேடு பஞ்சாயத்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நிரவி போலீசார், ஆண் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது துறைமுகத்தில் இறங்கும் போது, கால்தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






