என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம்
    X

    பிணத்தை பார்வையிட்டு ரெயில்வே போலீசார் விசாரணை.

    தஞ்சையில், ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம்

    • தண்டவாளத்தின் பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பூதலூர் ரெயில் நிலையம் அருகே இன்று 35 வயது மதிக்க ஆண் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் உத்தரவுப்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    ஆனால் இறந்தவர் யார் ? எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை.

    மேலும் இறந்து கிடந்தவரின் அருகில் திருச்சி- மயிலாடுதுறை ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கிடந்ததை போலீசார் கைப்பற்றினர்.

    இதனை தொடர்ந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா ? அல்லது தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×