என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவரை கீழே தள்ளி கொலை செய்த மனைவி கைது
- மது போதையில் தகராறு செய்த கணவரை கீழே தள்ளி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
- ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
மதுரை
மதுரை புது ராமநாதபுரம் ரோடு பழைய மீனாட்சி நகரை சேர்ந்தவர் மகாராஜா (வயது34), பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி. இவர் ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார். மகாராஜாவுக்கு மது பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து போதையில் மனைவி யுடன் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்றும் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் மகாராஜா மனைவியை அடிக்க முயன்றார். அதனை தடுத்த மனைவி மகா ராஜாவை கீழே தள்ளினார். அதனால் அவர் தடுமாறி விழுந்தார். அதன் அசை வில்லாமல் கிடந்துள்ளார்.
மனைவி அவரை எழுப்ப முயன்றபோது பேச்சு, மூச்சில்லாமல் இருந்துள் ளார். உடனடியாக அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மகாராஜா வின் தாய் சுந்தரி தெப்பக் குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி செல்வியை கைது செய்தனர்.






