search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுகள் கலந்து கடும் துர்நாற்றம்
    X

    தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலந்ததால் மீன்கள் இறந்து கிடந்தன.

    மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுகள் கலந்து கடும் துர்நாற்றம்

    • மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுகள் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை நகரின் அடை யாளமாக மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் மக்களின் பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது. வருடம் முழுவதும் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தெப்பக்கு ளத்தில் நிரப்பப்பட்டு வருகிறது.

    அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப் பட்டு நிரப்பப்பட்டது. இதன் காரணமாக தெப்பக் குளம் முழுவதுமாக நிரம்பி பிரம்மியாக காட்சி யளிக்கி றது. ஆனால் வைகை ஆற்றில் இருந்து வந்த தண்ணீரில் கழிவுநீரும், குப்பைகளும் கலந்தி ருந்ததால் தெப்பக்குளத்தில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தண்ணீர் சுகாதாரமின்றி இருப்பதால் தெப்பக் குளத்தில் மீன்கள் இறந்து கிடந்தன. கடும் துர் நாற்றத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட் டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தெப்பக்குளத்தில் மிதந்த கழிவுகளை ஊழியர்கள் படகில் சென்று அகற்றினர். முக்கியத்துவம் வாய்ந்த தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காமல் துர்நாற்றம் வீசுவதை தடுத்து சுகாதாரமாக வைத்து கொள்ள நடவ டிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×