என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கொலையுண்ட சங்கரன்
வட்டி தொழில் செய்த முதியவர் படுகொலை

- பேரையூர் அருகே வட்டி தொழில் செய்த முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.
- அவரது கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன்(வயது75). இவரது மனைவி பொன்னுத்தாய். இவர்களுக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
2 மகன்கள் திருப்பூரிலும், 1 மகன் மதுரையிலும், மகள் பி.தொட்டியபட்டி கிராமத்திலும் உள்ளனர்.கணவன்-மனைவி தனியாக வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை பேரையூர்- உசிலம்பட்டி சாலை அருகே சவுண்டையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத தொட்டியில் சங்கரன் பிணமாக கிடந்தார்.
அவரது கால்கள் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. அவரை மர்மநபர்கள் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளனர். இதுகுறித்து பேரையூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டி.எஸ்.பி. இலக்கியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அது கிணற்று பகுதியில் இருந்து வயல் வழியாக சிறிது தூரம் சென்று நின்று விட்டது.
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதபடுத்தினார். கொலையுண்ட சங்கரனின் மனைவி பொன்னுத்தாயிடம் போலீசார் விசாரித்த போது நேற்று இரவு 2 மணி வரை நான் வீட்டில் இருந்தேன். அதன் பிறகு தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது கணவர் வீட்டில் இல்லை என்று தெரிவித்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சங்கரன் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
பணம் வாங்கியவர்கள் யாரேனும் திருப்பி கொடுக்க மறுத்திருக்கலாம். அதை கேட்ட சங்கரனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ெதரிவித்தனர்.
மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டி–ருந்த சங்கரனை கடத்தி கொலை செய்தா–ர்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்றும் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொட்டியபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
