search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய  கிளீனர் தலை நசுங்கி சாவு
    X

    லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய கிளீனர் தலை நசுங்கி சாவு

    • லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய கிளீனர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    • லாரியை டிரைவர் நிறுத்தி இறங்கியபோது அவருக்கு நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பர்னிச்சர் கடைக்கு இன்று அதிகாலை சரக்குகளை ஏற்றிக்கொண்டு ராஜஸ்தா னில் இருந்து கண்டெய்னர் லாரி வந்தது. கடை 10 மணிக்கு திறக்கப்படும் என்பதால் லாரியை திருமங்கலம் நகரின் வெளியே சாலையோரத்தில் டிரைவர் ஜபார் (வயது 27) நிறுத்தி உள்ளார்.

    பின்னர் அவரும், கிளீன ரும் லாரிக்குள் தூங்கினர். இதனிடையே அங்கு வந்த 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் லாரியின் அடியில் தூங்கியதாக தெரிகிறது.

    காலை 10 மணிக்கு பிறகு எழுந்த டிரைவர் ஜபார் லாரியில் உள்ள சரக்குகளை கடைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் லாரியை இயக்கினார். அப்போது லாரியின் அடியில் படுத்திருந்த நபரின் தலையில் பின்னால் உள்ள டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர் கூச்ச லிட்டனர். இதையடுத்து லாரியை டிரைவர் நிறுத்தி இறங்கியபோது அவருக்கு நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி னர். அப்போது லாரியின் டயரில் சிக்கி இறந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியை சேர்ந்த பால்ராஜ் (52) என தெரிய வந்தது.

    லாரி கிளீனராக பணி யாற்றி வந்த இவர், அஜாக்கிரதையாக லாரியின் அடியில் தூங்கியதால் டயரில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.

    Next Story
    ×