என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாணவ-மாணவிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
  X

  மாணவ-மாணவிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாணவ-மாணவிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • பொறியியல், சட்டம், தொழில் கல்வி, மருத்துவம் படித்தவர்கள் உதவித்தொகை பெற இயலாது.

  மதுரை

  தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை சார்பில் படித்து முடித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு மையத்தில் மனுக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

  பட்டியல் இனத்தவர் 45 வயது வரையிலும் இதர வகுப்பினர் 40.வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு மையத்தில் பொதுப் பிரிவின் கீழ் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பட்டதாரிகள் உதவித்தொகை பெறலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடித்தவர்கள் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

  பொறியியல், சட்டம், தொழில் கல்வி, மருத்துவம் படித்தவர்கள் உதவித்தொகை பெற இயலாது. ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மீண்டும் வர வேண்டியது இல்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழங்கி பயன் பெறலாம்.

  ஓராண்டுக்கு பிறகு தொடர்ந்து உதவித்தொகை பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

  இந்த தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×