என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
- உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
- மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மனுக்களை பெற்றார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மனுக்களை பெற்றார்.
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் கருப்பையா, சமூகநல பாதுகாப்பு வட்டாட்சியர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நல கல்வியாளர் முத்துவேல், வருவாய் கோட்டாட்சியரின் தலைமை உதவியாளர் வீரமணி, தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் முத்துச்சாமி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளிடம் 150-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
Next Story