என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; 2 வாலிபர்கள் கைது
- பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இவர் பெரியார் பஸ் நிலையம் அருகில் யாசகம் வாங்கி வருகிறார்.
மதுரை
மதுரை கீரைத்துறை, தாயுமானவர் கோவில் சந்து பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெரியார் பஸ் நிலையம் அருகில் யாசகம் வாங்கி வருகிறார்.
இந்தநிலையில் அந்த பெண் நேற்று இரவு கூடலழகர் கோவில் அருகில் உள்ள வைகுண்ட ஏகாதசி மண்டபத்தில் படுத்தி ருந்தார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் தனியாக படுத்திருந்த அந்த பெண்ணு க்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.
இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் அந்தப் பெண்ணை தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் இன்ஸ் பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஜெய்ஹிந்த்புரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்ற சித்தன் (வயது 35), மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் அஜித் நாகராஜ் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






