என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்தராஜ் படத்திற்கு கொங்கு இளைஞர் பேரவையினர் மாலை அணிவித்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை
- பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
- தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி 3-ம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் அவரது தாயார் தெய்வானை நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக என் மகன் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வாங்கி குவித்து உள்ளான். இந்த ஆண்டு நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளை களை அடக்கி பரிசுகளை பெற்று வீட்டில் கொண்டு வந்து சேர்த்து முதல் பரிசாக அந்த காரையும் பெற்றுதான் வீட்டிற்கு வருவேன் என சொல்லிவிட்டு சென்றான். ஆனால் அவன் வாங்கிய பரிசுகள் மட்டுமே வீட்டில் உள்ளது. அதை அனுபவிக்க என் மகன் உயிரோடு இல்லை. என் மகனை நம்பித்தான் என் குடும்பமே உள்ளது. அவனது இழப்பை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்கி உதவ வேண்டும்
இவ்வாறு அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.






