என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- சோழவந்தான் அருகே சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே ரிஷபம்-சின்ன கண்மாய் வரை சாைல அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதா வது:-
ரிஷபம் கிராமப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து வருகின்ற னர். விவசாயம் மற்றும் எங்களின் அன்றாட தேவை களுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அறு வடை காலங்களில் அறு வடை செய்யும் நெல்லை களத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமென்றால் ஒரு மூடைக்கு ரூ.200 வரை கூலி கேட்கின்றனர்.
மேலும் தேங்காய், வாழைக்காய், வாழை இலைகட்டு ஆகியவற்றை ரோடு வசதி இல்லாததால் சுமார் 4 கிலோ மீட்டர் வரை தலைசுமையாக எடுத்து செல்கிறோம். எங்களின் சுமையை போக்க ரிஷபம் சடையாண்டி கோவில் முதல் சின்ன கண்மாய் வரை சாலை அமைத்து தர வேண்டும் என அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.






