என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டரிடம் மனு கொடுத்த வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள்.
வியாபாரிகள் சங்க பேரவையினர் கலெக்டரிடம் மனு
- 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் வியாபாரிகள் சங்க பேரவையினர் மனு அளித்தனர்.
- டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்க வேண்டும், கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற வேண்டும்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டலம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டலம் தலைவர் மைக்கேல் ராஜ், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் கூறியதாவது:-
உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்க வேண்டும், கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற வேண்டும். சுங்க கட்டணத்தை குறைப்பதுடன் அதை 2 மாதத்திற்குள் அகற்றா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவது, வாகன விதிமீறல் என்ற பெயரில் நடைபெறும் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்.
மின்கட்டணம், பெட்ரோல், டீசல், கியாஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில் சங்க நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், ஜெயக்குமார், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், தேனப்பன், கண்ணன், மரிய சுவீட் ராஜன், ஆனந்தன், சுருளிராஜன், பிச்சைபழம், சரவணன், கணேசன், வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






