என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
- மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
- தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் பகுதியில் கலைஞர் நூலகம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணியில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்காள மாநிலம் முர்சிதாபாத்தைச் சேர்ந்த ஹோசிமுதீன் மகன் இக்பால் (வயது 25) என்பவர் இன்று காலை வேலைக்கு வந்திருந்தார். அவர் கலைஞர் நூலக கட்டுமான பணியில் ஈடுபட்டார்.
அவர் சாரத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் உடல் முழுவதும் காயங்களுடன் அலறியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே இக்பால் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியின் போது கூலித் தொழிலாளி தவறி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.