என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

முருகப்பெருமான் திருக்கல்யாணம்

- சோழவந்தான் அருகே முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடந்தது.
- சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் சுப்பிரமணி சுவாமி கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை சூரசம்கார விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை பாவாடை தரிசனம் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். நேற்று மாலை இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் வானவேடிக்கையுடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.கிருஷ்ணமூர்த்திவாத்தியார் தலைமையில் யாகவேள்வி நடந்தது.நாகேஸ்வரன் பட்டர் மாப்பிள்ளை வீட்டாராகவும், விக்னேஸ்வரன் பெண் வீட்டாராகவும் இருந்து முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
இதில் செயல் அலுவலர் பாலமுருகன், ஆலயப் பணியாளர்கள், தொழிலதிபர் செந்தில்குமார் மற்றும் பிரதோஷ கமிட்டியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாங்கல்யபிரசாதம், கல்யாணவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.