என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
    X

    கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

    • கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • தி.மு.க.வினர் பழையநீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு மவுன ஊர்வலமாக வாடிப்பட்டி பஸ்நிலையம் வந்தனர்.

    வாடிப்பட்டி

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள், வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் அண்ணாசிலை முன்பு மதுரைபுறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கருணாநிதி படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ஒன்றியசெயலாளர் பாலராஜேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் சேகர், மாநில பொதுக்குழுஉறுப்பினர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாவட்டதுணைச்செயலாளர் அயூப்கான், பேரூராட்சிதுணைத்தலைவர் கார்த்திக், மதுசூதனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க.வினர் பழையநீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு மவுன ஊர்வலமாக பஸ்நிலையம் வந்தனர்.

    Next Story
    ×