என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்
- சோழவந்தான் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடந்தது.
- வீடுகள் மற்றும் கடைகளில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொதுஇடங்களில் தூய்மைபணி செய்தல், வீடுகள் மற்றும் கடைகளில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலையில் சோழவந்தான் பஸ் நிலையம், ரெயில்வே பீடர் ரோடு, ஒற்றைஅக்ரஹாரம், இரட்டைஅக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றினர்.
கழிவுகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசு வழங்கியும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், இளநிலை பொறியாளர்கள் லீலாவதி, கருப்பையா, துணைத்தலைவர் லதாகண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும்உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் வினோத்குமார் வரவேற்றார்.பணியாளர் சத்திய நாராயணன் நன்றி கூறினார்.






