என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
- செல்போனை பெற்றோர் பறித்து கொண்டதால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மதுரை
மதுரை சீமான் நகர், நூல் பட்டறை தெருவை சேர்ந்த மாரிமுத்து மகள் கலாவதி (வயது 18). இவர் பூவந்தியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்தார். இவர் படிப்பில் ஆர்வமின்றி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பெற்றோர் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். கலாதேவி தோழியின் செல்போனை வாங்கி பயன்படுத்தினாராம். இதனை பெற்றோர் தட்டி கேட்டனர்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த கலாதேவி நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Next Story