search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்திரை திருவிழா: டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விட பா.ஜ.க. கோரிக்கை
    X

    சித்திரை திருவிழா: டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விட பா.ஜ.க. கோரிக்கை

    • சித்திரை திருவிழாவின் போது டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விட வேண்டும்.
    • பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரையின் உலக புகழ்வாய்ந்த சித்திரை திருவிழாவில் மே 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்போது சில போதை ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 5நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திரை திருவிழாவில் கடந்த ஆண்டு போல உயிர்பலி ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர் குமார், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி தலைவி மீனா, சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×