search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிட்கோ தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம்
    X

    முகாமில் சிட்கோ தொழிலாளருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய காட்சி.

    சிட்கோ தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம்

    • கப்பலூரில் சிட்கோ தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • 2-ம் தவணை ஊசி போடாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ சென்னைக்கு அடுத்தப்படியான பெரிய சிட்கோ ஆகும். இங்கு 16 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலா ளர்களுக்கு ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிட்கோ சார்பில் 2 தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது பூஸ்டர் தடுப்பூசி போட சிட்கோ தொழில் அதிபர்கள் சங்கம் முடிவு செய்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட தொழில்மையம் மற்றும் கப்பலூர் தொழில்அதிபர்கள் சங்கம் இணைந்து நேற்று முதற்கட்டமாக 1000 தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமை கப்பலூர் தொழில்அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கணேசன், டான் சிட்கோ மேலாளர் கணேசன், மடீசியா முன்னாள் தலைவர் அரவிந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    செக்கானூரணி அரசுஆரம்பசுகாதார நிலைய மருத்துவமனை டாக்டர்கள் ஆர்த்தி, திவ்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர் தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை போடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு வாரமும் இந்த பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனவும், கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-ம் தவணை ஊசி போடாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் தொழில்அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்தார்.

    Next Story
    ×