என் மலர்
உள்ளூர் செய்திகள்

வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.
'டெஸ்ட் பர்ச்சேஸ்' வரியை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
- ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ வரியை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங் கள் எழுப்பப்பட்டன.
மதுரை
மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் முத்துக்குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் மற்றும் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்க ராஜ், சில்வர் சிவா, ஜெயக்குமார், கண்ணன், குட்டி அந்தோணிராஜ், ஆனந்தன், சுருளிராஜன், பிச்சைபழம், சரவணன், தேனப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
'டெஸ்ட் பர்ச்சேஸ்' வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், உணவுப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், மற்ற பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், வாகன விதி மீறல் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல் நடவடிக்கையை தடுக்க வேண்டும்,
மின் கட்டணம், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகிய எரிபொருட்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், மற்ற சுங்க சாவடியில் கட்டணத்தை குறைக்க வேண்டும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங் கள் எழுப்பப்பட்டன.