என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாகனம் மோதி பலியான ஆம்புலன்ஸ் டிரைவர்
  X

  கிருபாகரன்

  வாகனம் மோதி பலியான ஆம்புலன்ஸ் டிரைவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாகனம் மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் பலியானார்.
  • மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மதுரை

  மதுரை கே.புதூர், டி.ஆர்.ஓ காலனியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கிருபாகரன் (வயது 22), ஆம்புலன்ஸ் டிரைவர்.

  கிருபாகரனுக்கு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகில் உள்ள செவந்த ப்பட்டி சொந்த ஊர் ஆகும். இந்த நிலையில் அங்கு வசிக்கும் பாட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே பாட்டி யிடம் நலம் விசாரிப்ப தற்காக, கிருபாகரன் நேற்று காலை மோட்டார் சைக்கி ளில் துவரங்குறிச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.

  அங்கு பாட்டியை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி உள்ளார். பின்னர் கிருபாகரன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டார். மேலூர் அடுத்த வெள்ளரிப்பட்டி பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் கிருபாகரன் படுகாய மடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  சாலை விபத்தில் இறந்த கிருபாகரன் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து உள்ளார். இருந்தபோதிலும் தலைக்கவசம் உடைந்து பரிதாபமாக இறந்து உள்ளார்.

  சாலை விபத்தில் உயிரி ழந்த கிருபாகரனின் பெற் றோர் கண் பார்வை அற்ற வர்கள். தந்தை பொன்னு சாமி அரசு அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×