என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம்
- மதுரையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
தேர்தலில் தொடர் தோல்விகளை சந்திந்து வரும் எடப்பாடி பழனிச் சாமி பதவி விலக வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுரை பழங்கா நத்தம் நட ராஜ் தியேட்டர் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் எம்.பி.யும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், வழி காட்டுக் குழு உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகி யோர் தலைமை தாங்கினர்.
அமைப்பு செயலாளர் மார்க்கெட் பி.எஸ்.கண்ணன், அம்மா பேரவை இணைச்செயலாளர் சோலை குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் மாரிச்சாமி, அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞரணி மாநகர் மாவட்ட செயலா ளர் சரவணன், மேற்கு 4-ம் பகுதி செயலாளர் கணே சன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






