என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    லாரியில் கடத்திய 4,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    லாரியில் கடத்திய 4,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லாரியில் கடத்தப்பட்ட 4,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மண்டல ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோமதிபுரம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை மறித்தனர். போலீசாரை கண்டதும் அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவரை போலீசார் விரட்டிப்பிடித்தனர்.

    தொடர்ந்து லாரியை சோதனை செய்தபோது, அதில் தலா 50 கிலோ எடை உள்ள 90 அரிசி மூடைகள் என மொத்தம் 4,500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியையும், ரேசன் அரிசி மூடைகளையும் பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முனிச்சாலையைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திகேயன் (வயது 24) என என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    தப்பி ஓடிய சந்தைப்பேட்டையை சேர்ந்த பாண்டிவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் தான் ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

    Next Story
    ×