என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நிலத்தை விற்பதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி
  X

  நிலத்தை விற்பதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிலத்தை விற்பதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைதானார்.
  • இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை சரளாதேவி கொடுத்துள்ளார்.

  திருமங்கலம்

  திருமங்கலம் மாயோன் நகரை சேர்ந்த தியாகராஜன் மனைவி சரளாதேவி(48). இவர் திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூர் கல்லுப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமியிடம் 3.5 சென்ட் நிலத்தை சென்ட் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு பேசி முடித்தார்.

  இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை சரளாதேவி கொடுத்துள்ளார். ஆனால் தற்போது வரை இடத்தை பதிவு செய்யவில்லை. இது குறித்து பொன்னு சாமியிடம் கேட்டபோது கூடுதலாக ரூ.4.5 லட்சம் கேட்டுள்ளார்.

  இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் சரளாதேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமங்கலம் முகமது சாபுரத்தை சேர்ந்தவர் சின்னான்(49). இவரது 2 மகன்கள் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.

  அவர்களுக்கு மின்வாரிய அலுவல கத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 லட்சத்தை திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்த சின்னா(36). திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ராஜா(55) ஆகிய இருவரிடமும் சின்னான் கொடுத்துள்ளார்.

  ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இந்த நிலையில் இருவரும் போலியான அரசு ஆணை வழங்கி வேலை கிடைத்ததாக கூறியுள்ளனர். இது போலியான ஆணை என தெரிய வந்ததை தொடர்ந்து சின்னான் திருமங்கலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சின்னா, ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×