என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்ட விழிப்புணர்வு முகாம்
சட்ட விழிப்புணர்வு முகாம்
- பட்டியல் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சட்ட விழிப்புணர்வு அறிக்கை பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
- ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்தனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா உத்தரவு படியும் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல்
நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி வழிகாட்டுதலின் படியும் ஒன்பத்து வேலி, நாகலூர், இடையிருப்பு ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மக்களுக்கான சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
முகாமில் பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர் தனசேகரன், வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள் பற்றியும் சிவில் வழக்குகள், குடும்ப பிரச்சினைகள், வங்கிக்கடன் தொடர்பான பிரச்சனைகள், கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள், தொழிலாளர்களுக்கான பிரச்சனைகள் ஆகியதற்கு வட்ட சட்ட பணிகள் குழுவின் மூலம் நீதிமன்றம் முறையல்லாமல் மாற்றும் முறையில் தீர்வு காண்பது பற்றி விளக்கமாக கூறினார்.
பட்டியல் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சட்ட விழிப்புணர்வு அறிக்கை பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்தனர்.