என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

காய்கறிகளை மாலையாக அணிந்து ஊர்வலமாக வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்.
கும்பகோணம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு போராட்டம்

- விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.
கும்பகோணம்:
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இன்மை போன்றவற்றுக்கு காரண மான மத்திய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலை யத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.
தேசியக்குழு உறுப்பினர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார்.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராதாகி ருஷ்ணன், குமரப்பா, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலன், ராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், தண்டபாணி, கண்ணகி, நாராயணன், ராஜலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. கைத்தறி மாநிலத்தலைவர் மணிமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அழகேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு தலைமை தபால் நிலையம் பகுதிக்கு ஊர்வ லமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.